search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் தற்கொலை முயற்சி"

    • காயம் அடைந்த தருணை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆலந்தூர்:

    வடபழனி, மசூதி தெருவை சேர்ந்தவர் தருண். இவர் மீனம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். தினமும் மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வடபழனிக்கு மெட்ரோ ரெயிலில் சென்று வருவது வழக்கம். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக தருண் மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்து நடை மேடையில் காத்திருந்தார்.

    அப்போது மெட்ரோ ரெயில் வந்தபோது திடீரென தருண் ரெயில் முன்பாய்ந்தார். என்ஜின் முன்பு சிக்கிய அவரை சிறிது தூரம் மெட்ரோ ரெயில் இழுத்து சென்று நின்றது. இதில் பலத்த காயம் அடைந்த தருண் அலறி துடித்தார். இதனை கண்டு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய இருந்த பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். உடனடியாக பலத்த காயம் அடைந்த தருணை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவர் தருணின் பெற்றோர் சினிமா துறையில் வேலை பார்த்து வருகிறார்கள். தருண் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருததாக தெரிகிறது. இதனால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. நடைமேடையில் நிற்பதற்காக மெட்ரோ ரெயில் குறைந்த வேகத்தில் வந்ததால் அவர் பலத்த காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இது குறித்து மீன்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விரக்தியடைந்த மாணவர் திடீரென 80 அடி உயரம் கொண்ட கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
    • மாணவருக்கு இடுப்பு மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. எலும்புகளும் உடைந்தன.

    கோவை:

    கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவர்.

    இவர் கோவை வேலந்தாவளம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் மாதிரி தேர்வு நடந்தது. அப்போது மாணவர் தேர்வு எழுதும் போது காப்பியடித்ததாக தெரிகிறது.

    இதனை தேர்வு மையத்தில் பணியில் இருந்த 2 பேராசிரியர்கள் பார்த்து விட்டனர். உடனே அவர்கள் மாணவரை தேர்வு மையத்தில் இருந்து வெளியே அனுப்பினர்.

    மேலும் தேர்வில் காப்பியடித்தற்காக மாணவரிடம் உனது பெற்றோரை அழைத்து கொண்டு கல்லூரிக்கு வர வேண்டும் என எச்சரித்தனர். ஆனால் மாணவர் பெற்றோரை அழைத்து வரவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாணவர் வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தார். அப்போது பேராசிரியர்கள் அவரிடம் மீண்டும் நீ உனது பெற்றோரை அழைத்து கொண்டு வா என தெரிவித்தனர்.

    இதனால் விரக்தியடைந்த மாணவர் திடீரென 80 அடி உயரம் கொண்ட கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. எலும்புகளும் உடைந்தன.

    வலியால் மாணவர் அலறி துடித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த கல்லூரி நிர்வாகத்தினர் மாணவரை மீட்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே கல்லூரி மாடியில் இருந்து மாணவர் குதித்த தகவல் அங்கு படிக்கும் சக கல்லூரி மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவியது. இதையடுத்து 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவர் கீழே குதித்ததற்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த தகவல் அறிந்ததும் கே.ஜி.சாவடி போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து கே.ஜி.சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்வீரம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.
    • வீட்டில் தனி யாக இரு ந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார்.

    கோவை:

    கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணம்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் வேலு (வயது15). இவர் கல்வீரம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் வேலு 3 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த வேலு சாணிப்பவுடர் மற்றும் அரளி விதையை அைரத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அவரது தாய் அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு வேலுவை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பெரியார் காலனியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி யில் பிளஸ்-2 படித்து பொதுத்தேர்வு எழுதி இருந்தார். தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. இந்த முடிவில் பிரியதர்ஷினி எதிர்பா ர்த்தபடி அவருக்கு மதி ப்பெண்கள் கிடைக்கவி ல்லை. இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்ப ட்டார்.

    வீட்டில் தனி யாக இரு ந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணி ப்பவுடரை கரைத்து குடித்தார். சிறுது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக பிரியதர்ஷினியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    ×